’சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களை முடித்திருக்கும் அரவிந்த்சாமி, தற்போது ‘கள்ள பார்ட்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ‘ராட்சசன்’ புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மூவிங் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்குகிறார்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட, ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘கள்ள பார்ட்’ குறித்து இயக்குநர் ராஜ்பாண்டி கூறுகையில், “அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த காரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சராக நடிக்கிறார்.
படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட இருக்கிறோம்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...