உலக அளவில் முன்னணி மோட்டார் தொழில் நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் நிறுவனம். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் மோட்டார் தொழில்கள் மட்டும் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் தொழிலையும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, டிவிஎஸ் நிறுவன குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரியாகிறார். இவர் நடிக்கும் படத்தை மிஸ்கினிடம் உதவியாளராக பணியாற்றியவர் இயக்குகிறார்.
இப்படத்தில், பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த மைக்கேல் வில்லனாக நடிக்க, நாயகியாக புதுமுகம் ஒருவர் நடித்துள்ளார். படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தயாரித்து வரும் இப்படத்தின் தகவல்களை விரைவில் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்குப் பிறகு தனது குடும்ப வாரிசு நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி, பிறர் நடிக்கும் படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ள டிவிஎஸ் குழுமம், தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றில் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களை தயாரிக்கவும், விநியோகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...