தமிழ் சினிமாவின் நம்பர் காமெடி நடிகராகியுள்ள யோகி பாபு, முன்னணி ஹீரோக்களை தொடர்ந்து முன்னணி ஹீரோயின்களின் பேவரைட் காமெடி நடிகராகியுள்ளார். நயந்தாரா, ஜோதிகா என்று ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகைகள் கூட, யோகி பாபுவை சிபாரிசு செய்கிறார்களாம்.
இப்படி லீடிங் காமெடியனாக இருக்கும் யோகி பாபு ஹீரோவாக்க பலர் முயற்சித்து தோற்றுப் போன நிலையில், இயக்குநர் சாம் ஆண்டன் மட்டும் அதில் வெற்றிப் பெற்றிருக்கிறார். ஆம், அவர் இயக்கி வரும் ‘கூர்கா’ படத்தில் யோகி பாபு தான் ஹீரோ.
தற்போது, ‘கூர்கா’ படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் கதை குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறியிருக்கிறார். அதாவது, கடத்தப்பட்ட கார் ஒன்றை, அப்பாவி கூர்காவும், அவரது நாயும் கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் ‘கூர்கா’ படத்தின் கதையாம்.
யோகி பாபு, கனடா நடிகை எலிஸ்சா உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கொடுத்த ஒத்துழைப்பால் படத்தை விரைவாக முடிக்க முடிநது என்று கூறிய சாம் ஆண்டன், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.
காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள ‘கூர்கா’ கோடைக்காலத்தில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...