தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது தமிழ் சினிமாவுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதிலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப் பிடித்து நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
நயந்தாராவின் 63 வது படமாக உருவாகும் ‘ஐரா’ வில் முதல் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்து வரும் நயன்தாரா கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இப்படி என்னதான் பிஸியாக இருந்தாலும், அவ்வபோது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று காதல் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் வளர்க்கும் புகைப்படங்களை பார்ப்பவர்கள் ஒரு பக்கம் வயிறு எரிந்தாலும், மறுபக்கம் இவர்களது திருமணம் எப்போது நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பிலும் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் அல்ல, விக்னேஷ் சிவனும் நயன்தாராவை மிஸ்ஸஸ்.நயந்தாராவாக்க காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், திருமணம் குறித்து தனக்கு நெருக்கமான மேனஜர் மற்றும் உதவியாளர்களிடம் பேசிய நயன்தாரா, 100 படங்கள் நடித்த பிறகே திருமணம் பற்றி யோசிப்பேன், என்று கூறியிருக்கிறாராம்.
தற்போது, சுமார் 70 படங்களை தொட்டிருக்கும் நயன்தாரா, அப்படங்கள் வெளியான பிறகு மீதமுள்ள 30 படங்களில் கமிட் ஆகி, அவற்றில் நடித்த பிறகு தான் திருமணம் பற்றியே யோசிப்பதாக கூறியதை அறிந்த விக்னேஷ் சிவன், ஹார்ட் அட்டாக் வந்த எபெக்ட்டில் இருக்கிறாராம்.
ஆக மொத்தம், எப்படியும் நயந்தாராவின் திருமணம் குறைந்தது 5 ஆண்டுகள் கழித்து தான் நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது. தற்போது 34 வயதை கடந்திருக்கும் நயன்தாரா, எப்படியும் 40 தான் திருமணம் செய்துக் கொள்வார் போலிருக்கே.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...