ஹீரோ, வில்லன், காமெடியன் மற்றும் குணச்சித்திர என்று எந்த வேடமாக இருந்தாலும் சினிமாவில் பிஸியாக இருப்பவர்கள் சிலர் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்படுவதும் உண்டு. அப்படி சிரமப்படுபவர்களில் சிலர் சுதாரித்துக் கொண்டு வேறு தொழிலுக்கு தாவுவதும் உண்டு. சிலர் மட்டுமே சினிமாவையே நம்பி, பிறகு வறுமையில் வாடுவதும் உண்டு.
அந்த வகையில், சினிமா மற்றும் சீரியலில் பிஸியாக இருந்த நடிகர் ஒருவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால், சலூன் தொழிலில் ஈடுபட்டு, தற்போது அதே தொழியிலில் பிஸியாகவும் ஆகிவிட்டார்.
அந்த நடிகர் ஷாம். தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்த ஷாம் தற்போது சலூன் தொழிலில் பிஸியாகிவிட்டதாக அவரது மனைவி சிந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அவரும் தற்போது சினிமா சீரியல் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெய்வமகள் சீரியலில் திலகா என்ற வேடத்தில் நடித்த சிந்து, ‘காற்றின் மொழி’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஏராளமான சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருபவர், பரதநாட்டிய பயிற்சி வகுப்பும் எடுத்து வருகிறார். இப்படி கலைத்துறையில் பிஸியாக இருக்கும் சிந்துவிடம் அவரது கணவர் ஷாம் குறித்து கேட்டதற்கு, ”என் கணவர் ஷாம், முன்பு நிறைய படங்கள் மற்றும் சீரியல்களில் நடிச்சார். இப்போ அவர் சலூன் பிஸினஸ்ல கவனம் செலுத்துகிறார். அதுக்கே அவருக்கு நேரம் சரியா இருக்கு. நல்ல ஆக்டிங் வாய்ப்புகள் வந்தார் அவர் தொடர்ந்து நடிப்பார்.” என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...