நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’-யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பாலா இயக்கத்தில் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பாளர் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிறகு சில பல பஞ்சாயத்துக்கு பிறகு பாலா தரப்பும் இது குறித்து விளக்கத்தை வெளியிட்டு அமைதியாகிவிட்டது.
படத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்த தயாரிப்பாளர், துருவை தவிர மற்ற அனைவரும் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். இதனால், ‘வர்மா’ படத்தை கெளதம் மேனன் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், கெளதம் மேனம் மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதேபோல், துருவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘வர்மா’ படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்று இன்னும் முடிவாகதா நிலையில், படத்திற்கு ஹீரோயினை தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்துவிட்டார். ஆனால், அது ஜான்வி கபூர் அல்ல என்பது தான் தற்போதைய செய்தி.
ஆம், ‘வர்மா’ படத்தில் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி பனிதா சந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ‘அக்டோபர்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இந்த தகவலை ‘வர்மா’ பட தயாரிப்பாளரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
@BanitaSandhu @sri50 @E4Emovies @igtamil @TFU_Kannan @proyuvraaj @onlynikil @radhanmusic @Madaboutmoviez @Forumkeralam1 @VRFridayMatinee @MalayalamReview @AndhraBoxOffice @taran_adarsh Banita Sandhu and Dhruv Vikram to romance in the new Tamil version of Arjun Reddy pic.twitter.com/uoqNUyTrJM
— MUKESH RATILAL MEHTA (@e4echennai) February 16, 2019
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...