லஷ்மி கிரியேசன்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’. இதில் ஹீரோவாக நடிக்கும் சமுத்திரக்கனி, பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ’மொசக்குட்டி’ வீரா நடிக்கிறார்.
கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், தயாரிக்கவும் செய்திருக்கிறார். மரியா மனோகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மறைந்த நா.முத்துக்குமார், சினேகன், இசக்கி கார்வண்ணன், மடத்தமிழ் வேந்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய “சுடல மாட சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட...சொல்லு புள்ள...” என்ற பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதோடு, ரசிகர்களின் பாராட்டு மழையிலும் நனைந்து வருகிறது. மேலும், ஏற்கனவே பல தேசிய விருதுகளை பெற்றிருக்கும் நா.முத்துக்குமார், இப்படாலின் மூலமும் தேசிய விருது பெறுவார், என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
‘பெட்டிக்கடை’ வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...