’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். இருப்பினும், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபல பெங்காலி நாளிதழ் ஒன்று யாஷிகா ஆனந்த் தற்கொலை செய்துக் கொண்டதாக, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்து ரசிகர்களை மட்டும் அல்ல யாஷிகா ஆனந்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விசாரித்ததில், சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை யாஷிகா என்பவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரைப் பற்றிய செய்தியை போட்டிருக்கும் அந்த நாளிதழ், அந்த செய்தியில் யாஷிகா என்ற நடிகையின் புகைப்படத்திற்கு பதில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்டுவிட்டனர்.
இந்த விஷயம் அறிந்த யாஷிகா ஆனந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கோபத்தை ”What the hell :O" என்ற வார்த்தையால் வெளிப்படுத்தியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...