தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் திமுக குடும்ப வாரிசான உதயநிதி ஸ்டாலின், அவ்வபோது அரசியல் கூட்டங்களிலும் பங்கெடுத்து வருபவர், சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் தீவிரம் காட்ட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, உதயநிதி நடித்து தயாரித்திருக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தில் உதயநிதியின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை தமன்னாவின் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், என்று கூறிய இயக்குநர் சீனு ராமசாமி, அந்த வேடத்தை மறைந்த முன்னாள் முதவல்வர் ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கியதாக, தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற ‘கண்ணே கலைமானே’ பட பிரஸ் மீட்டில் இது குறித்து பேசிய சீனு ராமசாமி, “ஒரு போல்டான, தைரியமான பெண் வேடம் என்றதும், எனக்கு ஜெயலலிதா தான் நினைவுக்கு வந்தார். உடனே அவரைப் பற்றி பல தகவல்களை சேகரித்து, அதை வைத்து தான் நயந்தாராவின் உடை மற்றும் அவரது பாவனைகளை வடிவமைத்தேன். இந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை, அது தேவையும் இல்லை என்று நினைத்தேன். இப்போது தான் இதை சொல்கிறேன், “என்று கூறினார்.
ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கிய கதாபாத்திரம், அதுவும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரம், திமுக தலைவரின் வாரிசு நடிக்கும் படத்தில் இருக்கும் தகவல் வெளியானதும், திமுக ஏரியாவில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...