தற்போதைய பிரபலமான சின்னத்திரை காதல் ஜோடி என்றால் அது சஞ்சீவ் - ஆல்யா தான். விஜய் டிவி-யின் ‘ராஜா ராணி’ ஜோடியான இவர்கள் நிஜத்திலும் ஜோடிதான். இவர்களது காதலும், இவர்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களின் வைரல் பிராப்பர்ட்டிகளாக இருக்கிறது.
இந்த நிலையில், காதல் ஜோடிகளாக இருக்கும் இவர்கள் கணவன் - மனைவி தம்பதியாக எப்போதாகப் போகிறார்கள், என்ற எதிர்ப்பார்ப்பு அவர்களது பெற்றோர்களிடமும், ரசிகர்களிடமும் இருப்பது மட்டும் இன்றி, சஞ்சீவிடம் அதிகமாகவே இருக்கிறதாம். ஆனால், கல்யாணம் விஷயத்தில் ஆல்யா தான் முரண்டு பிடிக்கிறாராம்.
”இப்போவே தாலி கட்ட நான் ரெடி, ஆனால் இவ தான் சம்மதிக்க மாட்றா” என்று சஞ்சீவ் பேட்டி ஒன்றில் கூற, அதே பேட்டியில், “இந்த வாழ்க்கை நல்லா இருக்கு, கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் இன்னும் நாளு, ஐந்து வருடங்கள் இப்படியே காதலித்துவிட்டு பிறகு கல்யாணம் பற்றி யோசிக்கலாம்” என்று ஆல்யா சஞ்சீவுக்கும், திருமணம் குறித்து கேட்பவர்களுக்கும் பதில் கூறுகிறார்.
அதுமட்டும் அல்ல, சீரியலில் ஜோடியாக நடிக்கும் இவர்கள் விரைவில் திரைப்படத்திலும் ஜோடியாக நடிக்க போகிறார்களாம்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...