தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவரது இசையமைப்பில் வெளியான ‘பேட்ட’ பட பாடல்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, அனிருத் யாரையோ காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர். அதுமட்டும் இன்றி, அனிருத் பற்றி அவ்வபோது சில சர்ச்சையான தகவல்களும் வெளியாகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் காதலிப்பது குறித்து வெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் அளித்த அனிருத், “ரொம்ப நாளாகவே நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். இசையமைப்பாளராக ஆவதற்கு முன் காதலித்தேன்.
இப்போது உள்ள வேலையில் காதலிப்பது சரியாக இருக்காது, அதற்காக இப்படியே இருக்கவும் மாட்டேன், காதல் வரலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...