கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் இணைந்து நடித்த மாதவனும், அனுஷ்காவும் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள். இவர்கள் இணையும் படம் சைலண்ட் சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரி திரில்லர் படமாக உருவாகிறது.
கோபி மோகனுடன் இணைந்து கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கும் கோனா வெங்கட், இப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பணிபுகிறார். இப்படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஹெமந்த் மதுகர் கூறுகையில், “நான் உண்மையிலேயே உறைந்து போய் இருக்கிறேன். பல வருடங்களாக நடிப்பில் மகத்தான சாதனையை புரிந்திருக்கும் மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்துக்கு கிடைத்திருப்பது, என்னை மிகக் கடுமையாக உழைக்க, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உந்துகிறது. குறிப்பாக, இது ஒரு சைலண்ட் த்ரில்லராக இருப்பதால் அது முழுமையாக 'நடிகர்கள்' மற்றும் 'தொழில்நுட்ப கலைஞர்கள்' சார்ந்தது, அதற்கேற்ற வகையில் சிறப்பானவர்களை கண்டறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மாதவனின் அர்ப்பணிப்பு அபாரம். அதனால் தான் அப்படிப்பட்ட திரைப்படங்கள் அவரை விரும்புகின்றன. அவரின் சமீபத்திய கதைகளில், சிறந்த நடிகராக ப்ரீத் சீரீஸிலும், மிகக்கடுமையான பயிற்சியாளராக இறுதிச்சுற்று படத்திலும் அவர் ஸ்கோர் செய்ததை பார்த்தாலே புரியும். அவர் 'சாக்லேட் பாய்' என்று சொல்லப்படுவதை விரும்புவதில்லை, மாறாக தன் திறமைகளை மேம்படுத்தும் கதைகளை நடிக்கவே விரும்புகிறார். இந்த படம் அவரது மகுடத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அனுஷ்கா ஷெட்டியின் எந்த சூழ்நிலையிலும் அவரது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி தான் ஒரு 'அற்புதமான நடிகை' என்று நிரூபித்தவர். இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரத்துக்கு இது போன்ற குணங்கள் தேவைப்பட்டது. அனுஷ்காவை தவிர யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு ஆகியோர் மொழி மற்றும் எல்லைகளை கடந்து தங்கள் திறமையால் பிரபலமானவர்கள். அவர்களும் இந்த படத்தில் நடிப்பது பலம். குறிப்பாக கோனா வெங்கட் சார் மற்றும் கோபி மோகன் சார் எழுதிய கதை மற்றும் திரைக்கதையை திரையில் மொழி பெயர்க்கும் செயல்முறையை அனுபவிப்பதில் ஒரு இயக்குநராக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், ATMOS ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்காக தான் மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
கோபி சுந்தர் இசையமைக்கிறார். பாப் பிரவுன் (ப்ரிடேடர்ஸ், தி வால் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் புகழ்) சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். க்ஷனம்' மற்றும் 'கூடாச்சாரி' போன்ற திரைப்படங்களில் தன் ஒளிப்பதிவு மூலம் தெலுங்கு சினிமாக்கு ஒரு புது வண்ணத்தை வழங்கிய ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்கிறார். யனா ருசனோவா (ப்ரிசம், ட்ரோன் வார்ஸ், தி நெக்ஸ்ட் பிக் திங் புகழ்) கலை இயக்குனராக பணிபுரிகிறார். கோபி மோகன் திரைக்கதை எழுதியிருக்கிறார். 1500 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது.
பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது...
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...