டிவி மற்றும் திரைப்பட நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி புகார் கூறியதோடு, காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்கள்.
இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 2 வில் பங்கேற்ற தாடி பாலாஜி மற்றும் நித்யா அந்த நிகழ்ச்சியின் மூலம் இணைந்தார்கள். பிறகு இருவரும் சேர்ந்து வாழ தொடங்கிய நிலையில், தற்போது தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய நித்யா, சேர்ந்து வாழ தொடங்கிய சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் குடித்துவிட்டு அடிப்பது, என்னையும் என் மகளையும் துன்புறுத்துவது, ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
என்னை பற்றி தவறாக அவரும் அவர் நண்பர்களும் வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அவமானப்படுத்துகின்றனர், என்று தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...