நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாவதும், பிறகு அந்த புகைப்படங்களை யாரோ விஷமிகள் தனது மொபைல் போனை ஹக் செய்து திருடிவிட்டதாகவும், நடிகைகள் விளக்கம் அளிப்பதும் வாடிக்கையாவிட்டது. ஷன்சிகா உள்ளிட்ட சில முன்னணி நடிகைகளும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்க் கொண்டு வருகிறார்கள்.
இதுக்கும் மேலாக, மலையாள சினிமாவில் சில விஷயங்கள் நடந்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்கிறது. நடிகை பாவனாவை காரில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு இந்த சம்பவத்திற்கு பிரபல மலையாள நடிகர் திலீப் தான் காரணம் என்பதை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பாவனாவை போல நடிகர் திலீப்பால் மற்றொரு பிரபல நடிகையும் பாதிக்கப்பட்ட தகவலை பிரபல மலையாள பத்திரிகையாளர் ரத்னகுமார் பள்ளிசேரி வெளியிட்டுள்ளார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல, தற்போதைய திலீபின் மனைவியான காவியா மாதவன் தான். திலீப் தனது முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த பிறகு, நடிகை காவியா மாதவனை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த நிலையில், நடிகர் திலீப் காவியா மாதவனை மிரட்டியே திருமணத்திற்கு பணிய வைத்ததாக பத்திரிகையாளர் பள்ளிசேரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், Chandranudikkunna Dikhil என்ற படப்பிடிப்பில் தான் இருவரும் காதலித்தார்கள், அந்த நேரத்தில் மிகவும் நெருக்கமாகவும் இருந்தார்கள். அதேசமயம் திலீப், காவ்யா மாதவனை நிஷால் சந்திரனுடன் திருமணம் செய்துகொள்ள கூடாது என்றும் மிரட்டி இருந்தார்.
காவ்யா மாதவன்-நிஷால் திருமணம் உறுதியானதும், திலீப் நடிகையை மிரட்டியுள்ளார். நாம் இருவரும் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை நிஷால் வீட்டிற்கு அனுப்பி வைப்பேன், தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.
ஒரு நாள் நான் உங்களிடம் கண்டிப்பாக வருவேன், என்று காவ்யா திலீப்பிடம் கூறி சமாதானப்படுத்தியதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் காவ்யா மாதவன் மற்றும் திலீப் குறித்த பல உண்மைகளை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...