தமிழ் சினிமா உள்ளிட்ட இந்திய சினிமா முழுவதும் கடந்த ஆண்டு மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதிலும் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி, வைரமுத்து மீது கூறிய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி பல பிரபலங்கள் மீது வெளிப்படையாக பாலியல் புகார் கூறினார்.
இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி சினிமாக்களிலும் மீ டூ புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மலையாள சினிமாவை சேர்ந்த இளம் நடிகையான திவ்யா, 60 வயது நடிகரான அலான்சியர் லே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியதோடு, அவர் தன்னிடம் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் கூறியிருந்தார்.
ஆனால், நடிகையின் கோரிக்கையை நிராகரித்த நடிகர் அலான்சியர் லே, அவரது புகார் குறித்தும் மழுப்பலான பதில் அளித்தார். இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகர் அலான்சியர் லேவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் நடிகை திவ்யாவிடம் நடிகர் அலான்சியர் லே மன்னிப்பு கேட்டதுடன், மேலும் சிலரிடம் பாலியல் விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...