தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்று பிறகு அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமான சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருப்பதோடு, வசூல் மன்னனாகவும் இருக்கிறார்.
தற்போது மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா என்று முன்னணி ஹீரோயின்களாக தேர்வு செய்துக் கொண்டிருக்க, முன்னணி நடிகை ஒருவர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசைப்படுவதோடு, அதை வெளிப்படையாக கூறி தூதும் விட்டிருக்கிறார்.
அந்த நடிகை தான் ‘பாகுபலி’ தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனுடன் நடிக்க தனக்கு ரொம்பவே ஆசையாக இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டிவியில் இருந்து ஹீரோவாக வளர்ந்த சிவாவின் ஜர்னி தனக்கு ரொம்பவே பிடிக்கும், அவரது படங்களும் பிடிக்கும் என்று கூறியவர், அவருடன் நடிக்க வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்க தூதுவிட்டிருக்கும் தமன்னாவின் ஆசை நிறைவேறுமா, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...