மகேச் பாபு நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ள ‘ஸ்பைடர்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மகேஷ் பாபுவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் மிக பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, “பூம்...பூம்...” என்ற பாடலை தொடர்ந்து இன்று “ஆளி...ஆளி...” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஃபோக் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த பாடலை மெலடி குயின் ஹரினி, ஜோகி சுனிதா ஆகியோருடன் இணைந்து வட இந்தியாவின் பிரபல பாடகரான பிரிஜேஷ் த்ரிபதி சாண்டில்யா பாடியுள்ளார்.
என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...