தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதை காட்டிலும், தமிழ் சினிமாவின் கிசிகிசு மன்னர் என்று சொல்லும் அளவுக்கு ஆர்யா குறித்து பல கிசுகிசுக்குள் பரவிக் கொண்டிருந்த நிலையில், அவர் திடீரென்று சாயீஷாவை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஏன், சாயீஷாவின் பெற்றோருக்கும் இதில் அதிர்ச்சி தானாம்.
‘கஜினிகாந்த்’ படத்தில் தன்னுடன் நடித்த சாயீஷாவை ஆர்யா காதலித்து கரம் பிடிக்க இருந்தாலும், இது காதல் திருமணம் அல்ல என்று சாயீஷாவின் தாயார் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். காரணம், அவருக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லையாம், பிறகு சாயீஷாவின் பிடிவாதத்தினாலும், ஆர்யா இஸ்லாமியர் என்பதாலும் தான் அவர் ஒப்புக் கொண்டாராம்.
மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஆர்யாவின் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரது திருமணத்திற்கு வெறும் 100 அழைப்பிதழ்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல், சினிமா துறையில் வெறும் 10 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்களாம்.
சினிமா உலகமே ஆர்யாவின் திருமணம் குறித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்க அவரோ, வெறும் 10 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருப்பது அனைவரும்ம் அதிச்சியளித்திருக்கிறது. தன்னுடன் சேர்த்து கிச்கிசுக்கப்பட்ட நடிகைகளின் எண்ணிக்கையே பத்தை தாண்டும் நிலையில், தனது திருமணத்திற்கு வெறும் 10 பேரை மட்டும் ஆர்யா அழைப்பதன் மர்மம் என்னவாக இருக்கும், என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...