ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் நிறுவனம் தயாரிக்கும் படம் ’கோடீஸ்வரி’. குடும்பக் படமாக உருவாகும் இப்படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் இவர் இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார்.
இளம் நாயகனாக ஏ.மோகன் அறிமுகமாகும் இப்படத்தில் இன்னொரு நாயகனாக காவல் துறை அதிகாரியாக ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகிகளாக அஷ்மா, சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம், எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தர்மதுரை என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், சி.கருணாநிதி, ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தாமஸ் ரத்னம் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.எஸ்.ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ராம்நாத் எடிட்டிங் செய்ய, நந்தலாலா பாடல்கள் எழுதுகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாய் இளவரசன் இயக்குகிறார். இவர் ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், கலைமணி, இ.ராம்தாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சேலம், ஏற்காடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...