இயக்குநராக வேண்டும் என்று கோடம்பாக்கத்திற்குள் நுழைந்த அருண்ராஜா காமராஜ், நடிகராகவும், பாடலாசிரியராகவும் பிஸியானாலும், மறுபுரம் படம் இயக்குவதிலும் தீவிரம் காட்டி வந்தார். அதன்படி, தனது முதல் படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அருண்ராஜா காமராஜ், படம் இயக்குவதற்கு முன்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநராகிவிட்டார்.
இதுவரை இந்திய சினிமாவில் யாரும் சொல்லாத பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்க உள்ள அருண்ராஜா காமராஜ், அப்படத்திற்கான நடிகைகள் தேர்வில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட தெரிந்த நடிக்க ஆர்வமுள்ள பெண்கள் ஆடிசனில் கலந்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடு வருபவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார், இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தேவிகாவின் இந்த ஸ்டேட்மெண்டால் அருணராஜா காமராஜ் இயக்கும் படம் குறித்து தற்போது இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து அருணாராஜா காமராஜியிடம் கேட்டதற்கு, “தேவிகாவின் இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். இப்படத்தின் தரத்திற்கும், விளம்பரத்திற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த யாரேனும் இப்படத்தில் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.” என்று தெரிவித்தார்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...