முன்னணி தமிழ்த் தொலைக்காட்சியில் பேமஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ஜாக்குலீன், ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளராகவும் உள்ளார். இவருக்காக தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இதற்கிடையே, நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படக் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த ஜாக்குலீன், சமீபகாலமாக விஜய் டிவியில் ஆளே தென்படுவதில்லை. அதே சமயம், வேறு எந்த திரைப்படத்திலோ அல்லது டிவி நிகழ்ச்சியிலோ அவரை பார்க்க முடியவில்லை.
இது குறித்து விசாரிக்கையில், தற்போது திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஜாக்குலீன் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதே சமயம், அவரது குரல் வலம் சற்று சரியில்லாமல் இருப்பதால், அதற்கான ட்ரீட்மெண்டும் எடுத்து வருகிறாராம்.
குரலுக்கான ட்ரீட்மெண்ட் முடிந்ததும், திரைப்படம் மட்டும் இன்றி, பழையபடி விஜய் டிவி-யிலும் அவரை தொடர்ந்து பார்க்கலாம் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...