பிரபு தேவா, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகும் ‘எங் மங் சங்’ படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதில் இயக்குநர் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா ஆகியோர் நடிக்க, இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் வில்லனாக நடிக்கிறார்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். பிரபுதேவா, மு.ரவிகுமார் பாடல்கள் எழுத, பாசில் - நிரஞ்சன் எடிட்டிங் செய்கிறார்கள். ஸ்ரீதர், நோபல் நடனம் அமைக்க, சில்வா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி அர்ஜுன் எம்.எஸ். இயக்குகிறார்.
கும்பகோணம், பொள்ளாச்சி, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்த ‘எங் மங் சங்’ சீனாவில் உள்ள டெங் லெங் என்ற இடத்தில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள்.
குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகளில் பிரபு தேவா வில்லன்களுடன் மோத, சண்டைப்பயிற்சியாளர் சில்வா படமாக்கினார்.
1980 கால கட்டத்தில் நடப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட படம் என்பதால் ‘எங் மங் சங்’ படக்குழு ரொம்பவே மெனக்கெட்டு பணியாற்றி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...