சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படம் ‘என்னோடு நீ இருந்தால்’. மு.ரா.சத்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மானசா நாயர் நடிக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோகினி, அஜய் ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.
நாக.சரவணன் ஒளிப்பதிவு செய்யும் ப்படத்திற்உ கே.கே. இசையமைக்க, ராஜ்கீர்த்தி எடிட்டிங் செய்கிறார். எஸ்.சுப்பிரமணி கலையை நிர்மாணிக்க, கேசவன் நடனம் அமைக்கிறார். ஸ்டண்ட் ஜி ஆக்ஷனை வடிவமைக்க, எஸ்.ஆனந்த் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கும் மு.ரா.சத்யா படம் குறித்து கூறுகையில், “கிஷோர் ( மு.ரா.சத்யா) ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறான். ஒரு பணக்காரபெண்ணான பூஜா(மானஸா நாயர்) வை சந்திக்கிறான். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. திடீரென்று அவள் கானாமல் போகிறாள். அவளை பல இடங்களிலும் தேடுகிறான். அப்போது அவனுக்கு திகில் சம்பங்கள் பல நிகழ்கிறது. அந்த திகில் சம்பவங்களைக் கடந்து பூஜாவை கண்டுபிடித்தானா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை. திகிலுடன் காதலையும் கலந்து சொல்லி இருக்கிறோம். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. விரைவில் படம் வெளியாக உள்ளது.” என்றார்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...