இயக்குநர்களாலும், ஹீரோக்களாலும் தான் திரைப்படத்துறையில் நஷ்ட்டம் ஏற்படுகிறது, என்று தயாரிப்பாளர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ பெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக சி.பெருமாள் தயாரித்திருக்கும் ‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கெளதமன், ராசி அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே.ராஜன், படத்தின் இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன், தயாரிப்பாளர் சி.பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன், நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர்.கே.பழ்னி, பி.எஸ் எண்டர்டெய்ன்மெண்ட் உதயகுமார், எஸ்.பி.கே எண்டர்பிரைசஸ் எஸ்.பி.குமார், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வீரபாண்டியன், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரன், பி.ஆர்.ஓ யூனியன் முன்னாள் தலைவர் டைமண்ட் பாபு, பி.ஆர்.ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பி.ஆர்.ஓ ரியாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட ‘ஒற்றாடல்’ பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பு பெற்றதோடு, விருந்தினர்களிடம் பாராட்டும் பெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ”இன்று சினிமாத்துறையில் பெரிய பெரிய படங்கள் எல்லாம் படு தோல்வி அடைந்து வருகிறது. ஆனால், சில சிறு படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வருகிறது. இதற்கு காரணம் ஹீரோக்கள் தான். தெலுங்கு, இந்தி சினிமாவில் ஹீரோக்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டை வைத்து கணக்கிடபடுகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் தான் படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகமாக ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் கதைக்காக ஹீரோக்கல் தேர்வு செய்யப்பட்டார்கள், அதனால் படமும் வெற்றி பெற்றது. தற்போது, தயாரிப்பாளர்கள் ஹீரோக்களின் தேதிகளை பெற்றுக் கொள்கிறார்கள், ஹீரோக்கள் கை காட்டுபவரை இயக்குநராக்குகிறார்கள். அந்த இயக்குநர்களும் ஹீரோக்களை காக்கா பிடிப்பதற்காக செலவுகளை அதிகப்படுத்தி விடுகிறார்கள், இதனால் தான் பெரும் நஷ்ட்டம் ஏற்படுகிறது.
மொத்தத்தில், ஹீரோக்களாலும், இயக்குநர்களாலும் தான் தமிழ் சினிமா மிகப்பெரிய நஷ்ட்டத்தை சந்தித்து வருகிறது. திட்டமிட்டு, கதைக்காக மட்டுமே செலவு செய்தால் நஷ்ட்டம் ஏற்படாது. பரியேறும் பெருமாள், கோலமாவு கோகிலா, சமீபத்தில் வெளியான ‘எல்.கே.ஜி’ போன்ற சிறு படங்கள் மிகப்பெரிய வசூல் ஈட்டியுள்ளது. இதில் எந்த ஹீரோக்கள் இருந்தார்கள், கதையும், படமும் தான் ஹீரோ, வெற்றி பெறவில்லையா? இப்படி தான் படங்கள் வர வேண்டும்.
அதற்காக, இப்போது வெளியாகி இருக்கிறதே ஒரு எம்.எல் அதுபோல எடுக்க கூடாது. அப்படிப்பட்ட படம் எடுப்பதற்கு வேறு எதாவது தொழில் செய்து பணம் சம்பாதிக்கலாம். சினிமாவை வாழ வைக்க வேண்டும் என்றால் இதுபோன்ற நாகரீகமற்ற, சமூக சீர்க்கேட்டான படங்களை எடுக்க கூடாது.
‘ஒற்றாடல்’ படம் சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும், பாடல்களும், டிரைலரும் நிறைவாக இருந்தது. அதில் நடித்த நடிகர் நடிகைகளின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது. படம் ரசிகர்களை ஏமாற்றாது என்பது டிரைலரிலே தெரிகிறது.” என்றார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...