விளையாட்டை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெளியாகும் அத்தனைப் படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘யார் இவன்’ படமும் கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
’மும்பை மிரர்’, ‘ஜாக்பாட்’ உள்ளிட்ட பல இந்திப் படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழும் சச்சின் ஜோசி, தமிழில் நேரடியாக அறிமுகமாகும் இப்படத்தை சத்யா இயக்குகிறார். தெலுங்கில் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த சத்யாவுக்கு இது தான் நேரடி தமிழ்ப் படம்.
கபடியை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகியிருந்தாலும், அப்படங்களைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக கபடி பிளஸ் க்ரை த்ரில்லர் ஜானரில் இப்படத்தை சத்யா இயக்கியிருக்கிறார்.
தற்போது மக்களிடையே பிரபலமாக உள்ள புரோ கபடி வீரரான ஹீரோ சச்சின் ஜோஷின் காதல் மனைவி, திருமணமான ஒரு சில நாட்களில் கொலை செய்யப்பட, கொலை பழி சச்சின் ஜோஷி மீது விழுதுகிறது. இதனால் சிறைக்கும் போகும் சச்சின், தனது மனைவியை கொலை செய்த உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடித்து பழி வாங்குவதை கபடி போட்டியுடன் இணைத்து பரபரப்பான சஸ்பன்ஸ் திரில்லராக இயக்குநர் கொடுத்திருக்கிறார்.
இதில் ஹீரோயினாக ஈசா குபதா நடிக்க, பிரபு, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சதிஷ் நடித்துள்ளார்.
அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இதுவரை திரைப்படங்களில் காட்டப்படாத சிறைச்சாலை லொக்கேஷன்களும், அக்காட்சிகளை வித்தியாசமான முறையில் கையாண்டிருப்பதாக இயக்குநர் சத்யா தெரிவித்தார்.
எஸ்.தமன் இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தின் டிரைலரும் புரோமோஷன் டீசர்களும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள ‘யார் இவன்’ வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...