மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோவான பிரித்விராஜ் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழித் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் அவர் தான் இயக்கும் முதல் படத்திற்கு ‘லூசிஃபெர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய், டோவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய், சுரேஷ் மேனன், கலாபவன் சாஜன் ஆகியோர் நடிக்க, கெளரவ வேடம் ஒன்றில் பிரித்விராஜும் நடிக்கிறார்.
ஆசிவாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையை முரளி கோபி எழுத, ‘புலிமுருகன்’ படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலு வசனம் எழுதியுள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். சம்ஜித் முஹமது படத்தொகுப்பினை கவனிக்க, மோகன் தாஸ் கலையை நிர்மாணிக்கிறார். ஸ்டண்ட் சில்வா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ் நடனம் அமைக்கிறார்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இப்படம் அரசியல் கலந்த் த்ரில்லர் படமாக உருவாகிவருகிறது. இந்திய அரசியல் படமாக இப்படம் இருப்பதால் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் அரசியல் தொடர்புகளை இப்படம் பேச இருக்கிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், கொச்சின், மும்பை, லட்சதீவு, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...