தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விமல், மது போதையில் நடிகர் ஒருவரை கடுமையாக தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த புதுமுக நடிகர் அபிஷேக் என்பவர், விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த அபிஷேக்கை, நடிகர் விமல் மற்றும் அ4 பேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.
இதில், நடிகர் அபிஷேக்கின் நெற்றி, கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அபிஷேக், இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், மது போதையில் இருந்த நடிகர் விமல், அவரது ஆட்களும் என்னை தாக்கினர். அவர்கள் மீது உரிய நடவடிகை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு சட்ட பிரிவுகளின் கீழ் விமல் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதோடு, நடிகர் விமலை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...