ஒரு சில படங்களில், முன்னணி கதாபாத்திரங்களுக்கு இணையாக மிக வலுவாக நிற்கும் ஒரு சில கதாபாத்திரங்கள் இருக்கும். இத்தகைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் 'திரில்லர்' வகை படங்களில் அமையும். அந்த கதாபாத்திரங்கள் தான் விறுவிறுப்பாக படத்தை கொண்டு செல்ல தூண்டுதலாக அமையும். அந்த வகையில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கும் 'கே13' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இது குறித்து இயக்குநனர் பரத் நீலகண்டன் கூறும்போது, “ஸ்கிரிப்ட்டை முடித்தவுடன், இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நல்ல நடிகரை தேடிக்கொண்டிருந்தேன். இந்த படத்தில் முழு திரில்லர் விஷயங்களையும் இந்த கதாப்பாத்திரம் தான் தூண்டுகிறது. தனிப்பட்ட முறையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என நான் உணர்ந்தேன். அவரிடம் இணை இயக்குநர்களாக இருக்கும் என் நண்பர்கள் மூலம் அவரை அணுகினேன். அவர் நடிக்கும் காட்சிகளில் நடிகை காயத்ரியும் இருந்தார், இருவருமே மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். இப்போது கூட, நாங்கள் இந்த குறிப்பிட்ட காட்சியை படம் பிடித்ததை பற்றி நினைக்கும் போது, அது உற்சாகத்தை கொடுக்கிறது. இந்த படத்தின் முதல் ஷாட் அது தான், அனுபவம் வாய்ந்த இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன், காயத்ரி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் வேலை வாங்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது.” என்றார்.
ஆதிக் ரவிச்சந்திரன் பற்றி இயக்குநர் பரத் கூறும்போது, ”ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் இங்கு அதற்கு நேர் மாறாக இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் ஒரு மிகச்சரியாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் மற்றும் பாராட்டப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த கே13 படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். தாமரை பாடல் எழுதுகிறார், ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்குநராக பணிபுரிய, சுதேஷ் சண்டைப் பயிற்சியை கையாண்டிருக்கிறார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...