ஹீரோயின் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த சங்கீதா, கடந்த 2017 ஆம் ஆண்டு ‘நெருப்புடா’ படத்தில் நடித்ததோடு வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றின் மூலம் சங்கீதா மீண்டும் நடிக்க வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி பாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாய சிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், செண்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ரஜாவின் மகன் மாஸ்டர் பிரணவும் நடிக்கிறார்.
இரண்டு ஆண்டுகளாக பல வாய்ப்புகள் வந்தும் அவற்றை தவிர்த்து வந்த சங்கீதா, தற்போது மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து கேட்டதற்கு, “எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை தவிர்த்து வந்தேன்.
தமிழரசன் படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப்பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது.” என்றார்.
ஆர்.டி.ராஜாசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, பழனிபாரதி மற்றும் ஜெய்ராம் பாடல்கள் எழுதுகிறார்கள். கலையை மிலன் நிர்மாணிக்க, அனல் அரசு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். புவன் சந்திரசேகர் எடிட்டிங் செய்ய, பிருந்தா, சதீஷ் நடனம் அமைக்கிறார்கள். ராஜா ஸ்ரீதர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, மக்கள் தொடர்பை மெளனம் ரவி கவனிக்கிறார்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன், அதிக பொருட்ச்செலவில் பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். கெளசல்யா ராணி தயாரிக்கிறார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...