பல ரகசிங்கள் புதைந்து கிடக்கும் சினிமாவைப் பற்றி சிலர் கூறும் உண்மைகளால் அவ்வபோது சில சர்ச்சைகள் உருவாகி வருகிறது. அந்த வகையில், நாவல் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை ஒன்று விரைவில் உருவாக இருக்கிறது.
சினிமாத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஏ.எல்.சூர்யா என்ற இளைஞர் எழுதியிருக்கும் ’அனிதா பத்மா பிருந்தா’ என்ற இந்த நாவல் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நாவலின் மூலம் விரைவில் பல கசப்பான உண்மைகள் வெளியாவதோடு, பல்வேறு சர்ச்சைகளும் உருவாக உள்ளது.
560 பக்கங்களை கொண்ட இந்த நாவலை எழுதிய ஏ.எல்.சூர்யா, தனது ‘பீ பாஸிட்டிங் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்.
சினிமாத்துறையோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் ஏ.எல்.சூர்யா, தான் சந்தித்து பழகிய பலரிடமும் தனக்கு உண்டான மறக்க முடியாத அனுபவங்களையும், இனிய நினைவுகளையும், கசப்பான உண்மைகளையும், மனதில் ஆழமாக பதிந்த சம்பவங்களையும், ஆற முடியாத காயங்களையும் நாவலாக எழுதியிருக்கிறார்.
இதில் பிரபல நடிகை, கதாபாத்திரமாக வருகிறார். சாதனைகள் பல படைத்த புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் ஒருவரும் வருகிறார். இவர்களை தவிர, வேறு பல சினிமாத்துறை கதாபாத்திரங்களும் இதில் வருகிறார்கள். அவர்கள் யார்? என்பதை நாவலை படிக்கும் போதே, நாம் கண்டு பிடித்துவிடலாம்.
ஏற்கனவே, பல்வேறு தலைப்புகளில் ஏ.எல்.சூர்யா பேசிய 175 வீடியோ பதிவுகள் யூடியூபில் பரபரப்பை ஏற்படுத்தி பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.
மேலும், இதற்கு முன்பு ஏ.எல்.சூர்யா எழுதிய ’ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’, பணமே...பணமே...ஓடி வா’, ’பேராற்றல் படைத்தவர்களே...எழுந்திருங்கள்’, ‘கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?’ ஆகிய நூல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போது, ‘அனிதா பத்மா பிருந்தா’ நாவலை எழுதியிருக்கும் ஏ.எல்.சூர்யா, எழுதியதுடன் நிற்காமல், அதை பட உலகில் உள்ள நிறிஅய பிரபலங்களுக்கு அனுப்பி வைத்து வர, இந்த நாவல் பட உலகைல் என்ன தாக்கத்தை உண்டாக்குகிறது, என்பதை காத்திருந்து பார்ப்போம்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...