தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஆர்யா, முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 10 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது.
இதற்கிடையில், பல பட வாய்ப்புகளை பெற்று வரும் நேரத்தில் சாயீஷா திடீரென்று திருமணம் செய்துக் கொண்டது அவரது குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதேபோல், திருமணத்திற்கு பிறகு சாயீஷா தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்தது.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பதாக சாயீஷா தெரிவித்திருக்கிறார். மேலும், ஹிரோயின் சப்ஜக்ட், ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிக்காமல் இருப்பது, என்று பாகுபாடு பார்க்காமல் எப்போதும் போல தொடர்ந்து நடிப்பேன், என்று கூறியிருக்கும் சாயிஷா, திருமணத்திற்கு பிறகு நடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கும் முழு சுதந்திரத்தையும் ஆர்யா தனக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில், தொடர்ந்து பல படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் சாயீஷா, திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். அப்படத்தின் பெயர் டெட்டி. சக்தி செளந்தரராஜன் இயக்கும் இப்படத்தில் கிராபிக்ஸ் டெட்டி கரடி பொம்மை முக்கிய பங்கு வகிக்கிறதாம்.
இப்படத்தின் அறிவிப்பையும், பஸ்ட் லுக்கையும் ஆர்யா திருமணத்தின் போது படக்குவினர் வெளியிட்ட நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக சாயீஷாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு சாயீஷா ஓகே சொன்னால், திருமணத்திற்கு பிறகு ஆர்யா - சாயீஷா ஜோடி சேரும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...