அஜித்தின் 59 வது படமாக உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். அஜித் மற்றும் வித்யா பாலன் பங்குபெறும் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது.
‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இயக்குநர் எச்.வினோத் பல மாற்றங்களை செய்திருக்கிறாராம். குறிப்பாக இந்தி பிங்க் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், அஜித் ரசிகர்களுக்காக நேர்கொண்ட பார்வையில் பல ஆக்ஷன் காட்சிகளை வினோத் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளில் அஜித், எந்தவித டூப்பும் இல்லாமல் ரிக்ஸ் எடுத்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மழையில் பயங்கரமான ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம், இதில் அஜித் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்தாராம். எதற்காக இப்படி ஒரு ரிஸ்க், என்று படக்குழுவினர் அவரிடம் கேட்டதற்கு, ”எல்லாம் ரசிகர்களுக்காக தான்” என்று கூறினாராம்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...