இசைக்கு தேசங்கள் மாநிலங்கள் என்ற பேதம் கிடையாது. இசையால் எந்தத்தேசத்தில் இருக்கும் இதயங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முடியும். அப்படியான இசையால் பலரையும் கவர்ந்திழுத்த கனடா இசைக்கலைஞர்கள் சப்தஸ்வரங்கள் 2 என்ற இசை ஆல்பத்தை வெளியீட்டார்கள்.
கனடாவில் யுனிவர்செல் வோக்கல் அமைப்பை நிறுவி தமிழ் கலைஞர்களை ஊக்குவித்து வருபவர் ரூபன்ராம். யுனிவர்செல் வோக்கலின் இந்திய ஒருங்கிணைப்பாளர் துஷ்யந்தன் மற்றும் பாடகர் மகாலிங்கம் விழாவிற்கான அனைத்தையும் ஏற்பாடு செய்தனர்.
இந்த விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் டி.இமான், தினா, பாடலாசிரியர் அருண்பாரதி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவில் இசை அமைப்பாளர் இமான் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் யுனிவர்செல் வோக்கல் டீமிக்கு எனது வாழ்த்துகள். கனடாவில் நான் இரண்டு இசை ஆல்பம் பண்ணியிருக்கிறேன். கனடா எனக்கு நிறைய கெளரவம் கொடுத்திருக்கிறது. தமிழ் இருக்கை அமைப்பிற்கான அம்பாசிடராக இருக்கும் பெருமையையும் பெற்றிருக்கிறேன். அங்குள்ள திறைமையாளர்கள் இங்குள்ளவர்களோடு இணைந்து இப்படி ஒரு ஆல்பத்தை கொடுத்திருக்கிறார்கள். இதுபோல் இன்னும் நிறைய ஆல்பங்கள் அவர்கள் பண்ண வேண்டும். மேலும் வேறலெவல் விசயங்கள் நிறைய அவர்கள் செய்ய வேண்டும். இந்தவிழா சாதாரண இசை ஆல்ப வெளியீட்டு விழா போல் அல்ல. ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போன்று இருந்தது. இந்தக் குழந்தைகள் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும். அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகாக இருந்தது. இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு" என்று மனதார வாழ்த்த்தினார்.
விழாவில் இசை அமைப்பாளர் தீனா பேசும் போது, “"முதலில் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு சார்பாக கனடா தமிழ் இசைக் கலைஞர்களை வருகவருகவென வரவேற்கிறேன். கனடாவில் நம் தமிழர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு சென்று தங்களது யுக்திகளையும் திறமைகளையும் நிறுவியவர்கள். அவர்களுக்குள் ஒரு பயம் இருந்தது. நம்மால் நம் பூர்வ பூமியான தமிழ்நாட்டில் நம் இசையையும் பாடல்களையும் அரங்கேற்ற முடியுமா என்ற பயம் இருந்தது. அந்தப் பயத்தை இந்த யுனிவெர்செல் வோக்கல் குழுவினர் போக்கி விட்டார்கள். ஒரு நல்ல துவக்கத்தை இங்கு பிரம்மாண்டமாக ஏற்படுத்தி விட்டார்கள், அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. இங்கு பாடிய அனைவருமே மிகச் சிறப்பாக பாடினார்கள். இந்தத் திறமையாளர்களை இங்கிருக்கும் இசை வல்லுநர்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த அவையை மறக்க முடியாத அவையாக மாற்றி இருக்கிறீர்கள். இதில் பங்குபெற்ற இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.” என்றார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...