இயக்குநர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23 வது கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதுடன், சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் பங்கேற்று ஆசியாவின் சிறந்த திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்பட விழா மற்று நியூயார்க் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிட ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ தேர்வாகியுள்ளது.
பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமெளலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ‘மயக்கம் என்ன’ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து வஸந்த் எஸ்.சாய் இயக்கியிருக்கும் இப்படத்தில் பின்னணி இசை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...