இந்திய சினிமாவில் பெங்காலி நடிகர்களுக்கு என்று தனி இடம் உண்டு. அப்படி இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக அங்கம் வகித்தவ்ர் பெங்காலி நடிகர் சின்மோய் ராய்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சின்மோய் ராய், 1960 முதல் பெங்காலி சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு.
சின்மோய் ராயின் மனைவி ஜூயி பானர்ஜியும் பெங்காலி நடிகை தான். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில், தன் மகன், மகளுடன் வசித்து வந்த சின்மோய் ராய்க்கு நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
நடிகர் சின்மோய் ராயின் இறப்புக்கு இந்திய நட்சத்திரங்கள் பலர் இறங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...