‘பாகுபலி’ யில் ராஜமாதா சிவகாமியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய தொகையை சம்பளமாக் கேட்பதால் தான் ரம்யா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் பலர் அனுகிவதில்லை என்ற தகவல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் நடித்திருக்கும் வேடம் சர்ச்சையான வேடம் போல இருக்க, அதில் எப்படி அவர் நடிக்க சம்மதித்திருப்பார், என்பது குறித்தும் கோடம்பாக்கத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆபாச பட நடிகையாகா தான் நடித்தது ஏன்? என்பதற்கான விளக்கம் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க வேண்டாம், ஏதாவது புதிதாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அவர் எதிர்ப்பார்த்த போது தான் சூப்பர் டீலக்ஸ் பட வாய்ப்பு வந்ததாம்.
லீலா என்ற ஆபாச பட நடிகை வேடம் என்றதும், ஆர்வமாக கேட்ட ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா முழு கதையை சொன்னதும் ஓகே சொல்லிவிட்டாராம்.
மேலும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு காட்சிக்காக 37 டேக் வாங்கியதில் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். இனி இதுபோல நடக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர், அன்றைய நாளின் கடைசி காட்சியை இயக்குநர் ஓகே செய்யாத போது இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தாராம்.
ஒரு கலைஞருக்குள் இருக்கும் முழுத் திறமையை வெளிக்கொண்டு வரும் இயக்குநர்களை தனக்கு ரொம்ப பிடிக்கும், என்று கூறும் ரம்யா கிருஷ்ணன், அந்த வகையில் இயக்குநர் தியாகராஜன் குமரராஜா தனக்கு பிடித்தமான இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார், என்றும் கூறுகிறார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...