தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, நடித்தாலே படம் ஹிட், என்ற இமேஜ் உருவாகிவிட்டது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘விஸ்வாசம்’ பெற்ற மிகப்பெரிய வெற்றியையும் இதற்கு சான்றாக கூறுகிறார்கள்.
இதற்கிடையே, நயன்தாரா எந்த படத்தில் நடித்தாலும், ஒரு கண்டிஷனில் கராராக இருப்பார், அது என்னவென்றால், படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்பது தான். அந்த வகையில், அவரது நடிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள ‘ஐரா’ படத்தில் நடிப்பதற்காகவும் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார்.
’ஐரா’ வில் முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் பவானி என்ற கதாபாத்திரம் வரும் போஷன் அனைத்தும் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த பவானி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா கண்டிஷன் ஒன்றை போட்டு அதற்கு இயக்குநர் ஓகே சொன்ன பிறகே நடிக்க சம்மதித்தாராம்.
இது குறித்து படத்தின் இயக்குநர் சர்ஜுன் பேட்டி ஒன்றில் கூறுகையில், ”முதலில் நயன்தாரா ஒரு வேடத்தில் மட்டுமே நடிக்கவிருந்தார். பின்னர் பவானி வேடத்திலும் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதே சமயம், அந்த போஷனை கருப்பு வெள்ளையில் எடுக்கப் போகிறேன் என்பதையும் அவரிடம் கூறினேன்.
அப்போது, நயன்தாரா கருப்பு வெள்ளை கான்சப்ட்ல நீங்க உறுதியாக இருக்கீங்களா? என்று என்னிடம் பல முறை கேட்டதோடு, அப்படி எடுப்பதாக இருந்தால் மட்டுமே நான் பவானி வேடத்தில் நடிப்பேன், என்றும் கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...