பொள்ளாச்சி பாலியன் வன்கொடுமையால் ஒட்டு மொத்த தமிழகமே கொதித்து போயிருக்கும் நிலையில், சமூகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் பலவற்றுக்கு சினிமாவும் ஒரு காரணம், என்று நடிகை கெளதமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை, சமூக சேவகர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட கெளதமி, தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், தனது அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக தைரியமாக கூறி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல வார இதழின் இணையதளத்திற்கு கெளதமி அளித்திருக்கும் பேட்டியில், சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு சினிமாவும் ஒரு காரணமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கெளதமி, “சமூகத்துல நடக்கிற விஷங்களைத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள். அதே சமயம், சினிமாவை கோடிக்கணக்கானோர் ரசிக்கிறார்கள், அப்போ சினிமா துறையினருக்கும் பொறுப்பு இருக்கிறது.
சமூகத்தில் நடக்கிற குற்றச் சம்பவங்கள் பலவற்றுக்கும் சினிமா ஒருவகையில் காரணமா இருக்குது. அதிஅ ஏத்துக்கிறேன், ஆனால், சினிமாதான் தூண்டுகோல் என்பதை நான் ஏத்துக்க மாட்டேன். சினிமாவில் நிறைய நல்ல விஷயங்களையும் சொல்றாங்க, அதைப் பார்த்து பயனடைந்தவர்களும் இருக்கிறார்கள். அதையும் வெளிப்படையா சொல்லலாமே!” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுமை படைத்த தலைவியாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது எனக்கு தனக்கு மிகப்பெரிய வருத்தமாக இருப்பதாகவும், பேட்டில் கெளதமி தெரிவித்திருக்கிறார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...