‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அப்படத்தை தொடர்ந்து ’பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கையில் தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் இருக்கிறது.
இதற்கிடையே, டூ பீஸில் படு கவர்ச்சியாக நிவேதா பெத்துராஜ் இருப்பது போன்ற புகைப்படமும், ஆபாச வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அது தான் இல்லை, என்று மறுப்பு தெரிவித்த நிவேதா பெத்துராஜ், இதுபோல தொடர்ந்து தன்னை குறித்து வதந்தி பரப்பினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பேன், என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நிவேதா பெத்துராஜின் சமீபத்திய புகைப்படங்கள் அவரை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
நிவேதா பெத்துராஜ், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் போட்ட ரசிகர்கள், கூடவே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
அதாவது, கோவிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், சோதனைக்கு பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், நிவேதா பெத்துராஜ் மட்டும் எப்படி செல்போனை எடுத்துச் என்றதோடு, புகைப்படமும் எடுத்தார்? என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், அவர் ஒரு நடிகை என்பதால் அவருக்கு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது, என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...