தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக உள்ள நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நள்ளிரவு படப்பிடிப்பின் போது ரசிகர்கள் பலர் விஜயை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவை சந்திக்க முயன்ற துணை இயக்குநர் ஒரு அவமானத்தோடு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
நயன்தாராவிடம் முன் அனுமதி பெறாமல் துணை இயக்குநர் ஒருவர் அவரை சந்திக்க படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அவர் நயன்தாரா நடித்த படத்தில் பணிபுரிந்திருந்தாலும், பலத்த பாதுகாப்பு மிக்க படப்பிடிப்பு தளத்திற்குள் எப்படி நுழைந்தார் என்று நினைத்து நயன்தாரா ஆச்சரியப்பட்டாராம்.
மேலும், அந்த துணை இயக்குநர் நயன்தாராவிடம், கதை சொல்ல வேண்டும், என்று பேச ஆரம்பித்திருக்கிறார். அவருடன் பேசுவதை தவிர்த்த நயன்தாரா, உடனே ஜிம் பாய்ஸ்களை அழைத்து அந்த துணை இயக்குநரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு உத்தரவிட, அவர்களோ அந்த துணை இயக்குநரை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அங்கிருந்து விரட்டியடித்தார்களாம்.
தற்போது வெளியான இந்த தகவலால், உதவி இயக்குநர்கள் மத்தியில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...