எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘கருத்துக்களை பதிவு செய்’. இதில் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். இவர்களுடன் பல புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.
கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இப்படத்திற்கு மனோகர் ஒளிப்பதிவு செய்கிறார். சொற்கோ பாடல்கள் எழுத, மனோ கலையை நிர்மாணிக்கிறார். மாருதி எடிட்டிங் செய்கிறார். எஸ்.எல்.பாலாஜி நடனம் அமைக்க, டி.பி. வெங்கடேசன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். ராஜசேகர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுத, இணை தயாரிப்பை ஜே.எஸ்.கே.கோபி ஏற்றிருக்கிறார். ராகுல் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜித்தன் 2, 1 AM ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
ஹாரர் படமாக உருவாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’ படம் பற்றி இயக்குநர் ராகுல் கூறுகையில், ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான்.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது...சமூக வலை தல மான பேஸ்புக் பற்றியது தான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி ,காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள் என்பது தான் கதை.
பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை என் "கருத்துக்களை பதிவு செய்" படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும் சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது...நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு தான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன். பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க...இல்லவே இல்லை,
"பிசாசத்தான் வாங்கி கொடுக்கிறாங்க.
இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம் தான் இது. படம் விரைவில் வெளி வர உள்ளது.” என்றார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...