இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரித்த படம் ‘பரியேறும் பெருமாள்’. அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றதோடு, பல விருதுகளையும் வென்றது.
இந்த நிலையில், பரியேறும் பெருமாள் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதை தொடர்ந்து, இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், இப்படத்தை இயக்கும் காந்தி மணிவாசகம், இந்த படத்தில் இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்ததோடு, பல புதுமுகங்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரே (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்தார்.
கன்னட பரியேறும் பெருமாள் படத்திற்கு ஹீரோவாக தேர்வான மைத்ரேயனை, கதைக்களமான பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஓட்டியும் இயக்குநர் பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார்.
கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...