நாடோடிகள் , ஈட்டி ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தயாரித்துள்ள வெற்றி படைப்பு ‘கீ’. இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை காலீஸ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பு நகூரன்.
வரும் ஏப்ரல் 123 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜீவா, “வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலயாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார்.அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம்.தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது.சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிபதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள் .சிறப்பான பணியைச் செய்துள்ளார். காலீஸ் சிறந்த இயக்குனர் .இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும்.. இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி ,அணைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளது.படத்தொகுப்பாளர் நாகூரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .இறுதியாக இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது .உங்கள் அன்பாலும் ஆதரவாலும் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.” என்றார்.
இயக்குநர் காலீஸ் பேசுகையில், “செல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு 4 வயது குழந்தை ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அந்த குழந்தை இந்த படம் பார்க்க வேண்டும். ஒரு 70 வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை எடுத்து கூறும் படம் . இந்த படம் வெளிவர கடைசிவரை உறுதுணையாக இருந்த நடிகர் ஜீவா, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நிக்கி கல்ராணி ஒரு சின்சியரான நடிகை. அருமையாக நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு விரைவாகவே வந்து விடுவார். அபி நந்தனின் ஒளிப்பதிவு, நகூரனின் படத்தொகுப்பு என அனைவரும் அருமையாக வேலை செய்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள பத்ம சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 12 ஆம் தேதி படம் வெளிவருகிறது உங்களின் அனைவரின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.,
நடிகை நிக்கி கல்ராணி பேசுகையில், “மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படம் வருகிறது என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்கும் காலீஸ் அவர்களுக்கும் நன்றிகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். 4 ,5 வருடங்களாக இந்த படத்தை ஒரு குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளனர்.. ஏப்ரல் 12ம் தேதி படம் வெளியாகிறது இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என முழுமையாக நம்புகிறேன். காலீஸ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர். ஜீவாவுடன் நான் முதலில் நடித்த படம் இது .ஆனால் கலகலப்பு 2 படம் முதலில் ரிலீஸ் ஆனது. இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கேமராமேன் அபிநந்தன் ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது.. உங்கள் அனைவரது ஆதரவாலும் அன்பினாலும் படம் மாபெரும் வெற்றி வெற்றி அடையும் என நம்புகிறேன்.” என்றார்.
இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கோவிந்த் பத்ம சூர்யா பேசுகையில், “தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்துள்ளேன். வில்லனாக நடித்து உள்ளேன். வாய்ப்பளித்த இயக்குனர் காலீஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் ரிலீஸாகிறது .உங்கள் அனைவரின் ஆதரவாலும் இந்த படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.” என்றார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...