ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளில் ஒன்றான அவெஞ்சர்ஸ் வரிசை படங்களின் இறுதிப் படமான ‘அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான புதிய அந்தோமை ஏ.ஆர்.ரஹ்மான உருவாக்கியுள்ளார்.
வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்’-ன் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளுக்கான ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான உருவாக்கியுள்ளார். இந்த மார்வெல் அந்தம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இது குறித்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், “என் சொந்த குடும்பத்திலேயே என்னை சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.” என்றார்.
மார்வெல் இந்தியா ஹெட் பிக்ரம் துக்கல் கூறுகையில், “அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் ஒரு படம் மட்டும் அல்ல, இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ரசிகர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான ஒரு பயணம். ரசிகர்கள் மிகவும் விரும்பும் மார்வெல்லை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கொண்டாடுவது தான் சரியான வழி. ரசிகர்களின் அசாதாரண ஆதரவுக்கு நாங்கள் சிறிய அளவில் தெரிவிக்கும் நன்றி.” என்றார்.
தானோஸ் மூலம் நிகழ்வுகள் பாதி பிரபஞ்சமே அழிந்து விட, சூப்பர் ஹீரோக்கள் பலரும் மறைந்து விட, மீதமுள்ள அவெஞ்சர்ஸ் எடுக்கும் இறுதி முடிவு தான் இந்த 22 படங்களின் இறுதி படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.
கெவின் ஃபைஜ் தயாரிக்க, அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ இரட்டை இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். லூயிஸ் டி'எஸ்ஸ்பிஸிடோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, டிரின் டிரான், ஜான் ஃபேவ்ரூ மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாக தயாரிப்பில் பணிபுரிந்துள்ளனர். கிறிஸ்டோபர் மார்கஸ் & ஸ்டீபன் மெக்ஃபீலி திரைக்கதை எழுதியுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...