'சர்கார்’ வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்து வரும் புதுப்படத்தை ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அட்லீ இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
விஜய் - அட்லீ மூன்றாவது முறையாக இணைவதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் மாபெரும் வெற்றிப் படமான ‘மெர்சல்’ படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய நிலையில், தற்போது அப்படத்தை மீண்டும் ஒரு முறை கொண்டாட ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆம், தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவில் பல மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் ஓடி வெற்றிப் பெற்ற ‘மெர்சல்’ விரைவில் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
விஜயின் பல படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ‘மெர்சல்’ படமும் இந்த ஆண்டு இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இந்த ஆண்டு வெளியாகும், என்ற தகவல் மட்டுமே வெளியாகியிருக்கிறது. மற்றபடி தேதி மற்றும் மாதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
எப்படி இருந்தாலும், ‘மெர்சல்’ மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு ரசிகர்களை தயார்ப்படுத்து விட்டது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...