சினிமா வாய்ப்பு குறைந்த பிறகு நடிகர்கள் அரசியலுக்கு போவது தான் வழக்கமாக இருந்த நிலையில், தற்போது நடிகைகளும் அரசியல் கட்சியில் இணைவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த நக்மா மற்றும் குஷ்பு இருவரும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொருப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிரபல இந்தி நடிகை ஊர்மிளாவும் தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளார்.
’ரங்கீலா’ இந்தி படம் மூலம் பிரபலமான ஊர்மிளா, தமிழில் ‘இந்தியன்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர், தற்போது பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் நிலையில், காங்கிரஸில் இணைந்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், நடிகை ஊர்மிளா காங்கிரஸில் இணைவது குறித்து, மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து பேசினார்.
இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், அட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றும்படி வாழ்த்தினார்.
மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளா காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...