சிவாஜி கணேசனின் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘வசந்த மாளிகை’, 45 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புது பொலிவுடன் வெளியாகிறது.
வாணிஸ்ரீ கதாநாயகியாக நடித்த இப்படத்தில் பாலாஜி, வி.கே.ராமசாமி ஏ.சகுந்தலா, குமாரி பத்மினி ஸ்ரீதேவி, நாகேஷ், ரமா பிரபா சுகுமாரி, மேஜர் சுந்தர்ராஜன், ஆலம், சி.கே.சரசுவதி, வி.எஸ்.ராகவன். டி.கே.பகவதி. எஸ்.வி.ராமதாஸ், சி.ஆர்.பார்த்திபன், பண்டரிபாய். சாந்தகுமாரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
திரையிட்ட இடமெல்லாம் மக்களின் வரவேற்பை பெற்ற இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. கே.வி.மகாதேவனின் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாத கானங்களாக தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ராமநாயுடுவின் விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் தயாரித்த இப்படத்தை கே.எஸ்.பிரகாஷம் இயக்கியுள்ளார். ஏ.வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கண்ணதாசன் எழுதிய பாடல்களை, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடியிருந்தனர்.
இப்படத்தை இயக்குநர் வி.சி.குகநாதன் வாங்கி டிஜிட்டலில் மாற்றி கலர் சேர்ப்புகளை சரியாக்கி, அதை ராமு மூலம் நாகராஜ் வாங்கி ரிலீஸ் செய்கிறார். அன்றைய காலகட்டத்தில் இலங்கையிலும் இப்படம் அதிக நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நவீன தொழில்நுட்பத்துடன் மெருகேறியுள்ள ‘வசந்த மாளிகை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நாளை (மார்ச் 29) சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. இதில், நடிகர்கள் பிரபு. ராம்குமார் . விக்ரம் பிரபு, துஷ்யந்த், இந்த படத்தில் நடித்துள்ள வாணிஸ்ரீ மற்றும் பாடியுள்ள எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பங்கேற்க, இவர்களுடன் வி.சி.குகநாதன், ஜெயா குகநாதன் .எஸ் .பி .முத்துராமன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரையுலக பிரமுகர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...