கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் பிரபலமான சம்யுக்த ஹெக்டே, ‘வாட்ச்மேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே, ‘வாட்சேன்’ படத்தில் நாயுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்திருக்கும் சம்யுக்தா ஹெக்டே, இது தற்செயலாக நடந்தாலும், இதை தொடர்ந்து தான் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய சம்யுக்தா ஹெக்டே, ”நான் இந்த படத்தை பற்றி பேசுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். கதை சொல்லல் ஆகட்டும் அல்லது தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகட்டும், தமிழ் சினிமா மிகச்சிறப்பாக இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் 2-படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த இரண்டுமே புதுமையான கருத்துக்களை கொண்டு உருவானவை தான். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை. இந்த இரண்டு படங்களுக்கும் இடையிலான ஒரு பொதுவான தன்மை 'நாய்'. ஆம், மிகவும் தற்செயலாக நடந்தாலும், எனக்கு பிடித்த செல்லப்பிராணிகளுடன் திரையில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இந்த இரு திரைப்படங்களுமே வேறு வேறு வகையை சார்ந்தவை.
இது முற்றிலும் எனக்கு ஒரு புதிய அனுபவம். இயக்குநர் விஜய் சார், பெண் நடிகர்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டுபவர். 'வாட்ச்மேன்' படத்துக்காக என்னை அணுகியபோது, அது என்ன வகை படம் என்பதையோ அல்லது கதையை பற்றியோ நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த படம் நிச்சயம் என்னை மேம்படுத்துவதற்கு உதவும் என எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. படத்தின் முடிவில், என் அனுமானங்களும் நம்பிக்கையும் சரி தான் என்பதை படம் நிரூபித்திருக்கிறது. ஏப்ரல் 12, 2019 அன்று படம் வெளியாவதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மந்திரவாதிகள். அவர்கள் கைவண்னத்தில் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இது என் பார்வையில் இருந்து மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை வழங்கும் என நம்புகிறேன்.” என்றார்.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கும் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். நீரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கிறார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...