Latest News :

நாயுடன் கைகோர்த்த ஸ்ரீகாந்த்!
Sunday March-31 2019

பி.எம்.பி மியூசிக் & மேக்னட்டிங் லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில், கே.சி.பொகடியா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ஈஷான்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், பிரம்மானந்தம், சாயாஜி ஷிண்டே, ஓ.ஏ.கே.சுந்தர், கராத்தே ராஜா ஆகியோர் நடிக்க, ராக்கி என்ற நாய் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறது.

 

பப்பி லஹரி மற்றும் சரண் அர்ஜூன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அஷ்மல் கான் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.பி.ஜெயராமன் பாடல்கள் எழுதுகிறார். பி.லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார். பாப்பி நடனம் அமைத்திருக்கிறார்.

 

கதைப்படி, சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர்  செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர். 

 

எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார்.

 

சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர். சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது. எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர், இன்ஸ்பெக்டர் கள் ராஜா, சேகர் நால்வரும் கூட்டுச்சதி செய்து சந்தோஷைக் கொலை செய்துவிடுகின்றனர்.

 

இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் இருவரும் கமிஷனர் செல்வத்திடம், சந்தோஷைக் கொலை செய்தது யாரென்று தெரியவில்லை என்று பொய் சொல்கின்றனர்.

 

ஆனால், ராக்கி சந்தோஷைக் கொலை செய்த எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர், ராஜா, சேகர் ஆகிய நால்வரையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்று திரைக்கதை நகர்கிறது.

 

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ள ‘ராக்கி’ வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

4484

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

Recent Gallery