தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் தமன்னா, தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் வருபவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஹாரர் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் தமன்னா வில்லி வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கவர்ச்சியாக நடிக்க ஓகே சொல்லும் தமன்னா, உதட்டோடு உதடு வைத்து கொடுக்கும் லிப் லாக் முத்தக் காட்சிக்கு மட்டும் நோ சொல்லி வருகிறார். அவரை எப்படியாவது முத்தக்காட்சியில் நடிக்க வைக்க வேண்டும், என்று பல ஹீரோக்களும், இயக்குநர்களும் முயற்சித்தாலும், அனைவரும் தோல்வியை தான் சந்தித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கும் தமன்னா, அதற்கு ஒரு கண்டிஷனும் போட்டியிருக்கிறார். அதாவது, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் மட்டுமே லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பாராம்.
சமீபகாலமாக இந்தி நடிகர் பற்றி பேசி வரும் தமன்னா, இந்தி சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காகவே இப்படி பேசுவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...